சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்று கொண்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்று கொண்டனர். அதன்படி, ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷபிக், சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்று கொண்டனர். இந்த 5 நீதிபதிகளுக்கும் உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றதிற்கு புதிய நீதிபதிகளை நியமித்து இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டிருந்தார். ஸ்ரீமதி, பாரதி சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷஃபிக், சத்ய நாராயண பிரசாத் ஆகிய 5 பேர் கூடுதல் நிரந்தர நீதிபதிகளாக ஜனாதிபதி நியமித்திருந்தார். இந்த நிலையில், 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்று கொண்டனர்.