270 கிலோ குட்கா கடத்திய 5பேர் கைது.

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் நெகமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவதாக ரகசிய தகவல் வந்தது. இதன் பேரில் தனிப்படை காவ‌ல்துறை‌யின‌ர் சம்பவம் இடமான போலிகவுண்டன்பாளையம் அருகே வாகன தணிக்கை செய்தனர். அப் போது 4 சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கடத்தி வந்த பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மகன் ஆல்வின்(30 கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமது மகன் சர்புதீன்(38) அனிபா மகன் இஸ்மாயில் (29)பொள்ளாச்சி பகுதியில் சேர்ந்த ஜெயராஜ் மகன் இமானுவேல் (38) மற்றும் துரைப்பாண்டியன் மகன் பாலசுப்பிரமணி(47) ஆகியோரை கைது செயயபட்டனர். அவர்களிடமிருந்து ரூ.3,லட்சம் மதிப்புள்ள 270 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா ) | 1இருசக்கர வாகனம்-1,நான்கு சக்கர வாகனம் மற்றும் ரூ 1, லட்சத்து99, ஆயிரம் பணம்ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் டுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.