கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீசுக்கு தகவல் வந்தது.போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசார் அங்குள்ள ஜமீன் ஊத்துக்குளி – போடிபாளையம் ரோட்டில் சோதனை செய்தனர். அப்போது ராசி செட்டிபாளையம் செங்கத்துறையைச் சேர்ந்த ராமன் ( வயது 54) என்பவரிடமிருந்து 7 லாட்டரி டிக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல பொள்ளாச்சி புரவிபாளையம் டி .நாகூரை சேர்ந்த உதயகுமார் ( வயது 63) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 50 லாட்டரி டிக்கெட் கைப்பற்றப்பட்டது.
மதுக்கரை காந்திநகர் பகுதியில் லாட்டரி டிக்கெட் விற்றதாக குறிச்சி பிள்ளையார் புரத்தைச் சேர்ந்த அஷ்ரப் அலி ( வயது 45 )கைது செய்யப்பட்டார் . இவரிடம் இருந்து 40 லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி ரோட்டில் நடந்த சோதனையில் பொள்ளாச்சி ,சேர்மன் வீதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (வயது 58) கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 72 கேரளா லாட்டரி டிக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது.