நீதிமன்ற பெண் ஊழியரிடம் 5,50 லட்சம் மோசடி.

கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ள கிணறு பகுதியை சேர்ந்தவர்பிரேமா (வயது 30) இவர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் துடியலூர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர்கூறியிருப்பதாவது:- நான் 20 22 ஆம் ஆண்டு ஒட்டன்சத்திரம் நீதிமன்றத்தில் வேலை பார்த்த போது அங்கு அலுவலக உதவியாளராக இருந்த செல்லத்துரை என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. அப்போது அவர் தன்னிடம் ரூ 5 லட்சத்து 50 ஆயிரம், மற்றும் 2 பவுன் தங்க நகைகளைதிருப்பி தந்து விடுவதாக வாங்கினார் ஆனால் அவர் திருப்பிக் கொடுக்கவில்லை. நான் நகை பணத்தை கேட்டும் அவர் திருப்பி தர மறுத்து வருகிறார். எனவே எனது பணத்தையும் மோசடி செய்த செல்லதுரை மீது நடவடிக்கை எடுத்துநகை பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார் இது குறித்து துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மிதுன்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.