கோவை மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன். உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக கல்லூரி மாணவர்களிடம் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் செட்டிபாளையம், மதுக்கரை, கே. ஜி. சாவடி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கல்லூரி களில் படிக்கும் வெளியூர் மாணவர்கள் தனியாக வீடு மற்றும் அறை எடுத்து தங்கி உள்ளனர். அவர்களை குறிவைத்து போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து மாணவர்கள் தங்கி இருக்கும் வீடுகள் மற்றும் அறைகளில் சிறப்பு தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள் .அதன் பேரில் ஒரு கூடுதல் போலீஸ்சூப்பிரண்டு தலைமையில் 4 டி.எஸ்.பி. க்கள் 8 இன்ஸ்பெக்டர்கள் 450 போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் இந்த 3 போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வெளியூர் மாணவர்கள் தங்கி இருக்கும் வீடுகள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு சென்று போலீசார் ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினார்கள். இதில் சில மாணவர்கள் தங்கி இருக்கும் வீடுகளில் கஞ்சாவை பொட்டலம் போட்டு கொடுப்பதற்காக சிறிய அளவிலான பிளாஸ்டிக் கவர்கள் இருந்தன. அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் மாணவர்கள் தங்கி இருந்த அறையில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் உள்ளிட்ட போதைபொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்தனர் .அந்த வீடுகளில் இருந்த மாணவர்கள்கோழிக்கோடுஆதித்யன் ( வயது 21)கண்ணூர் ராகுல் ( வயது 21)பாலக்காடு அமிர்தாஸ் ( வயது 20)மலப்புரம் விஷ்ணு நாராயணன் (வயது 21) எர்ணாகுளம் அபி நிவ் (வயது 20)பத்தினம் திட்டா ஆனந்தன் (வயது 20)திருச்சூர் ரெணில் (வயது 24ஆகியோர்)கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு போதைப்பொருட்கள் சப்ளை செய்த நபரையும் போலீசார் கைது செய்தனர்.இவர்கள் உரிய ஆவணம் இன்றி பயன் படுத்தப்படுத்தி வந்த 9 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாவட்டத்தில் தொடர்ந்து இது போன்ற சோதனைகள் நடத்தப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் தெரிவித்தார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0