கோவை சூலூரில் குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் சங்கத்தின் 43 ம் ஆண்டு கூட்டம். பணி நிரந்தரம் கோரி தீர்மானம்

கோவை சூலூர் பகுதியில் உள்ள எஸ் ஆர் எஸ் திருமண மண்டபத்தில் தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் சங்கத்தின் 43ஆம் ஆண்டுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவர் பிரான்சிஸ் மாநாட்டின் கொடியை ஏற்றி வைத்து தலைமை ஏற்று தொடங்கி வைத்தார் , மாநாட்டின் முதல் நிகழ்வாக உயிரிழந்த பணியாளர் களுக்கும், தலைவர்களுக்கும் அஞ்சலி தீர்மானத்தை சங்கத்தின் இணைச் செயலாளர் எம் சசிகுமார் முன்மொழிந்தார் இதனை அடுத்து சங்கத்தின் உதவி தலைவர் பி சக்தி வேல் வரவேற்புரை ஆற்றினார் தொடர்ந்து மாநாட்டின் துவக்கமாக கோவை சிஐடியு மாவட்ட கமிட்டியின் பொதுச்செயலாளர் எஸ் கிருஷ்ணமூர்த்தி பேசினார் அதைத் தொடர்ந்து சங்கத்தின் வேலை அறிக்கையை பொதுச்செயலாளர் ஆர் சரவணன் எழுத்துப்பூர்வமாக எடுத்து வைத்தார். இதன் தொடர் நிகழ்வாக வேலை அறிக்கையின் மீது மகாசபை பிரதிநிதிகள் விவாதத்தை துவங்கினர் அதைத் தொடர்ந்து சங்கத்தின் பொருளாளர் ஆர் ராஜேந்திரன் வரவு செலவு அறிக்கையை எழுத்துப்பூர்வமாக முன் வைத்தார் மகா சபையை வாழ்த்தி சங்கத்தின் உதவி தலைவர் எம் பாலகுமாரும், குடிநீர் வடிகால் வாரிய மாநில அமைப்பான மத்திய அமைப்பின் செயலாளர் எஸ் சி பிரகாசம் ஆகியோர் பேசினர் முடிவாக நிறைவுறையை குடிநீர் வடிகால் வாரிய ஊழிய மத்திய அமைப்பினுடைய உதவித் தலைவர் சி ஐயப்பன் உரை ஆற்றினார். இறுதியாக சங்கத்தின் உடைய செயலாளர் மத்திய அமைப்பின் நிர்வாகிகள் ஆன எஸ் பெலிக்ஸ் நன்றியுரை ஆற்ற மகா சபை நிறைவுற்றது கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.

1) கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆளும் திமுக தேர்தல் வாக்குறுதியாக குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மின்சார வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றக் கூடிய ஒப்பந்த பணியாளர்களை 480 நாட்கள் முதல் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற தீர்மானம் 2) வாரிய ஆணை 505 நாள் 12 12 1986 வாரியத்தில் பணியாற்றும் பொருத்துனர் மற்றும் மின்யாளர்களுக்கு 480 நாட்கள் முதல் முன் தேதியிட்டு அமுல் ஆக்கி நிலவையுடன் பணபலன்னை உடனே வழங்கிட கோரியும் 3) குடிநீர் வடிகால் வாரியத்தில் உள்ள 3000-க்கும் மேற்பட்ட கலகள் மற்றும் அலுவலக காலிப்பணியிடங் களை ஏற்படக்கோரி 4) தமிழக அரசாணைப்படி வாரிசு அடிப்படையில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு கல்வித் தகுதிக்கு உண்டான பதவியை வழங்கிட கோரியும் 5) எலக்ட்ரிகல் டிப்ளமோ படிப்பை முடித்துள்ள மின்பணியாளர்களுக்கு மின் கண்காணிப்பாளர் இளநிலை பொறியாளர் பதவியை உடனடியாக வழங்க கோரியும் 6) கூட்டுக் குடிநீர் திட்டங்களை பராமரிக்க விடப்பட்ட அவுட்சோர்சிங் முறையை கைவிட்டு பொதுமக்களுக்கு சுத்தமான சுகாதாரமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க திட்ட ங்களை வாரியமே ஏற்று நடத்த கோரியும் 7) தமிழக அரசு அரசு ஊழியர்களுக்கு வழங்க க்கூடிய அகவிலைப்படி உயர்வை அதே தேதியிட்டு அதே நாள் முதல் வாரியாக பணியாளர்களுக்கும் ஓய்வு பெற்றோருக்கும் குடும்ப ஓய்வு இருக்கும் வழங்க கோரியும் 8) மூவாயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் வாரியத்தில் இருந்தும் பணியில் இருக்கும் போது உயிரிழந்த பணியாளரின் வாரிசுகள் 300க்கும் மேற்பட்டோர் வேலை வழங்காததை கண்டித்து உடனடியாக வாரிசு வேலை வழங்கக்கோரி 9) வாரியத்தில் பணி ஓய்வு பெற்ற பின்னரே பென்ஷன் ப்ரோபோசல் தயாரிக்கப்பட்டு ஆடிட் செய்யப்பட்டு பென்ஷன் கிடைப்பதற்கு மூன்று நான்கு மாதங்கள் காலதாமதம் வருகிறது அதை போக்க ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதத்திற்கு முன்னரே பென்ஷன் ப்ரோபோசல் அனுப்பும் முன்பிருந்த நடைமுறையை போலவே தற்போதும் கொண்டு வர வேண்டும் என்றும் 10) வாரியத்தில் பணி ஓய்வு பெற்ற நாளிலேயே ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும் என்ற பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.