கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய பகுதியில் வசிப்பவர்யஷ்வந்த்குமார் ( வயது 23) இவர் கடந்த 1 – ந் தேதி நாரணாபுரம் ,ஜே.ஜே பம்ஸ் கம்பெனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத 4 பேர் யஷ்வந்த்குமாரை பீர் பாட்டிலைக காட்டி மிரட்டி அவரிடமிருந்த செல்போன்,பணம் ரூபாய் 1000/-, வெள்ளி பிரேஷ்லெட்-1 மற்றும் தங்க கடுக்கன் 3 கிராம் ஆகியவற்றை வழிப்பறி செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது சம்மந்த மாக பாதிக்கப்பட்ட நபர் அன்னூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இப்புகாரில் விரைந்து நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்டாக்டர். கார்த்திகேயன் உத்தரவுபிறப்பித்தார்.இதன் பேரில் 4 தனிப் படைகள் அமைக்கப்பட்ட புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மகன் கோகுல் (27) தங்கராஜ் மகன் பூபதிராஜ் (27) பாலன் மகன் வினோத்குமார் (30) தர்மராஜ் மகன் சந்தோஷ் (27)
ஆகியோர் இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இந்நிலையில் தனிப்படையினர் மேற்படி 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து தங்க கடுக்கன் 3 கிராம் மற்றும் வெள்ளி பிரேஷ்லெட், ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0