கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது மற்றும் கள் விற்பனை செய்பவர்களிடம் போலீசார் லஞ்சம் பெறுவதாக கோவை மாவட்ட காவல்துறைக்கு புகார் வந்தது. இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில் சட்ட விரோதமாக மது மற்றும் கள் இறக்கி விற்பனை செய்பவர்களிடம் லஞ்சம் வாங்கிய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீஸ்காரர் களை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட் ) செய்து மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவிட்டார் அதன்படி கள் இறக்குபவர்களிடம்பணம் பெற்றதாக பேரூர் மதுவிலக்கு அமுல் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன்பணியிடை நீக்கம் செய்யப் பட்டார். இதேபோல சட்ட விரோதமாக மது விற்ற நபர்களிடம் பணம் பெற்றதாக மது விலக்கு அமல் பிரிவு போலீஸ் ஏட்டு மதன்குமார், வடக்கி பாளையம் சோதனை சாவடி வழியாக செல்லும் லாரி டிரைவர்களிடம் பணம் வாங்கியதாக போலீஸ் ஏட்டு செல்வகுமார் மற்றும் போலீஸ்காரர் பஞ்சலிங்கம் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இதற்கான உத்தரவை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பிறப்பித்தார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0