நீலகிரி மாவட்டம் உதகை நகர உட்கோட்டம் புதுமந்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கவுடாசோலை என்றh இடத்தில் வசித்துவரும் பழனிச்சாமி (எ) செல்வம் (50), த.பெ. பி. மணி, என்பவர் கடந்த 19.12.2024 அன்று காலை 11 மணிக்கு தனது மனைவியுடன் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்ப வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில்
இருந்த சுமார் 48 சவரன் தங்க நகைகள் மற்றும் 2000 ரூபாய் மதிப்புள்ள வெள்ளி
நகைகளை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. பழனிசாமி கொடுத்த புகாரின்
அடிப்படையில் புதுமந்து காவல் நிலைய கு.எண்.93/2024 பிரிவு 331 (3), 305 BNS Act ல்
வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா,இ.கா.ப. அவர்களின் அறிவுறுத்தலின்படி உதகை உட்கோட்ட துணைகாவல் கண்காணிப்பாளர் . நவீன்குமார் அவர்களின் மேற்பார்வையில் புதுமந்து நிலைய பொறுப்பு ஆய்வாளர் நித்யா தலைமையில் தனிப்படைகள் அமைக்கப் பட்டு குற்றவாளிகளை தேடிவந்தனர். காவல் தலைமையில் 4 மேற்படி சம்பவ இடம் சென்று பார்வையிட்டு மோப்பநாய் மற்றும் விரல்ரேகை தடய பிரிவு ஆய்வு செய்து புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் பழனிச்சாமி வீட்டில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தோட்ட வேலைக்காக சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தை சேர்ந்த 1.அபய் போர்த்தி (19), த.பெ. ஈஸ்வரசிங் கார்டு, 2. ஈஸ்வரசிங் கார்டு (43), த.பெ. பர்தேஸ் சிங் கார்டு, 3. ஆனிதா பாய் (38), க.பெ. ஈஸ்வரசிங் கார்டு, 4. அங்கித் சிங் போர்த்தி (18), த.பெ. ஈஸ்வரசிங் கார்டு ஆகியோர்கள் சேர்ந்ததும் இவர்கள் அனைவரும் பழனிசாமி வீட்டில் இல்லாத நேரம்n பார்த்து திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இவர்கள் அனைவரையும் கைது செய்து திருடப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் மீட்டனர். நீலகிரி மாவட்ட காவல்துறையினர் குற்றம் நடந்தவுடன் மிகவும் துரிதமாக பணியில் செயல்பட்டு குறுகிய நேரத்தில் அனைத்து குற்றவாளிகளையும் கண்டுபிடித்து கைது செய்தும், திருடப்பட்ட அனைத்து நகைகளையும் கைப்பற்றியதை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா,இ.கா.ப., கோவை சரக காவல்துறை துணை தலைவர் ப.சரவணசுந்தர். இ.கா.ப., மற்றும் மேற்கு மண்டல காவல்துறை தலைவர்
த.செந்தில்குமார், இ.கா.ப. ஆகியோர் பாராட்டினார்கள், திருடப்பட்ட 48 சவரன் தங்க நகைகளின் உரிமையாளர்கள் நீலகிரி காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்,.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0