கோவையில் ஒரே நாளில் 4 பேர் தூக்குபோட்டு தற்கொலை..

கோவை அருகே உள்ள கணுவாய் அஜந்தா நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஆனந்தகுமார் (வயது 32) இவர் கடந்த 2 வாரமாக கோவை அரசு மருத்துவமனையில் மன நல சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பிய ஆனந்தகுமார் நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி அமுதவல்லி ரத்தினபுரி போலீசில் புகார் செய்துள்ளார் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .

இதேபோல திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை .அவரது மகன் காந்தி ( வயது 18) பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் வீட்டில் அடிக்கடி செல்போன் பேசிக் கொண்டிருந்தார். இதனால் அவர்கள் பெற்றோர்கள் அவரை கோவையில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் .காந்தி கோவை ராமநாதபுரம் ,ஒலம்பஸ், 80 அடி ரோட்டில் உள்ள உறவினர் மீனா என்பவரது வீட்டில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார்..இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் காந்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உறவினர் மீனா ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .

கோவை சுந்தராபுரம், பெரியசாமி சேர்வை வீதியை சேர்ந்தவர் சீனிவாசன் இவரது மனைவி சோபியா (வயது 31) கணவர் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார். கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சோபியா அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் மஞ்சுளா போத்தனூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி, கம்பன் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 32) இவர் எந்த வேலைக்கும் செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவர் தாயார் கலாமணி சிங்கநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..