கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்விஷம் குடித்து தற்கொலை . உருக்க கடிதம் சிக்கியது

கோவைசெல்வபுரம் குமாரபாளையம், ரைஸ் மில் காலனி சேர்ந்தவர் ராமச்சந்திரன் ( வயது 46 )இவரது மனைவி விசித்ரா (வயது42) மகள் ஸ்ரீநிதி (வயது 23) மற்றொரு மகள் ஜெயந்தி ( வயது 14) தொழிலதிபரான ராமச்சந்திரன் மதுப்பாட்டில்களுக்கான மூடிகளை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு சொந்தமாக ரைஸ் மில்லும் இருந்தது. இவரது அக்காள் ராணி மற்றும் குடும்பத்தினர் அதே பகுதியில் தனி தனியாக வசித்து வருகிறார்கள். மகள் ஸ்ரீநிதி கனடாவில் படித்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர் பட்டப்படிப்பு முடித்து கனடாவில் இருந்து கோவை வந்திருந்தார். ஜெயந்தி தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார் .நேற்று காலை 9 மணிக்கு இவர்களது வீட்டில் வேலை செய்யும் சுதா என்ற பெண் வேலைக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த ராமச்சந்திரன் வேலைக்கார பெண்ணை வீட்டுக்கு சென்று விடுமாறு கூறினார். இதனால் சுதா தனது வீட்டுக்கு சென்று விட்டார் .இந்த நிலையில் இவர்களது வீடு நீண்ட நேரமாக பூட்டி கிடந்ததால் அருகில் உள்ள அக்காள் ராணி மதியம் 12 மணிக்கு தம்பி வீட்டுக்கு சென்று கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது ராமச்சந்திரன் மகள்கள் ஸ்ரீநிதி, ஜெய நிதி ஆகியோர் கட்டிலிலும், மனைவி விசித்திரா தரையிலும் வாயில் நுரை தள்ளியவாறு பிணமாக கிடந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராணி அலறி அடித்துக் கொண்டு வெளியே ஒடி வந்தார். இது குறித்து செல்வபுரம் போலீசுக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 4 பேரும் வெள்ளை நிற சைனைடு விஷத்தை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது.தெரிய வந்தது. உதவி கமிஷனர் ரகுபதி ராஜா தலைமையில் போலீசார் அந்த வீட்டில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது தற்கொலைக்கு முன்பு ராமச்சந்திரனின் மனைவி விசித்திரா ஒரு நோட்டில் எழுதி வைத்த உருக்கமான கடிதத்தை கைப்பற்றினார்கள்அதில் அவர் கூறியிருப்பதாவது:- என் கணவர் ராமச்சந்திரன் பிடிவாதம் மிக்கவர். அவருக்கு அதிகமாக கோபம் வரும். இந்த கோபத்தினால் எங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டது. அவர் சொல்வதை நாங்கள் கேட்க வேண்டும் .அவர் அதிகமாக கடன் வாங்கியது எங்களுக்கு பிடிக்கவில்லை. வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. கடைசியாக அவர் என் பெயரிலும் கையெழுத்து வாங்கி கடன் வாங்கினார். இந்த கடனை வாழ்நாள் முழுவதும் கட்ட முடியாது என்று நான் சொல்லியும் அவர் கேட்கவில்லை. ஆகவே நாங்கள் இதனை விரும்பாமல் தற்கொலை செய்ய முடிவு செய்திருக்கிறோம். என் கணவர் இனி அவர் விருப்பம் போல வாழட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- முதலில் ராமச்சந்திரனின் மனைவி விசித்திரா மற்றும் 2 மகள்கள் சயனைடு விஷத்தை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மனைவி மற்றும் 2 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதை பார்த்த ராமச்சந்திரனும், மீதம்இருந்த சயனைடை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலை செய்துள்ளார். தொழிலதிபரான இவர் தற்போது வசிக்கும் வீடு அருகே புதிய பங்களா வீடு கட்டி வந்துள்ளார். அதற்காக தொழில் அபிவிருத்திக்காகவும் பலரிடம் கடன் பெற்றுள்ளார். சொத்துக்களை அடமான வைத்தும் ரூ. 20 கோடி கடன் பெற்றதாகவும், சில கடன்களை அடைத்து விட்டதாகவும் தெரிகிறது .இந்த நிலையில் மீண்டும் கடன் வாங்க மனைவியை வற்புறுத்தி உள்ளார். ஆனால்அதற்கு மனைவி மறுத்ததாக தெரிகிறது .இது தொடர்பாக கணவன் — மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் விரக்த்தி அடைந்த விசித்திரா குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டதும், பின்னர் ராமச்சந்திரன் தற்கொலை செய்ததும் தெரியவந்தது. இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினார்கள்.புதிதாக கட்டி வந்த பங்களா வீட்டின் பணிகள் முடிந்த நிலையில் குடி போகும் முன்பு தற்கொலை செய்து கொண்டார்களே என்ற உறவினர்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.