சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பிடிபட்டது!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதை பொருட்களை கண்டறிந்திட ரயில்வே போலீஸ் டிஐஜி அபிஷேக் தீக் க்ஷித் கடுமையான உத்தரவு பிறப்பித்தார். அதன் பேரில் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 5 வது பிளாட்பார்மில் கடைசி பெட்டியில் தமிழக ரயில்வே போலீஸ் சூப்பிரண்ட் ஈஸ்வரன் நேரடி மேற்பார்வையில் சென்னை சென்ட்ரல் போலீஸ் துணை சூப் பிரென்ட் கர்ணன் முன்னிலையில் போலீஸ் மோப்ப நாய் துப்பு துலக்க 4 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது. அதை யார் கொண்டு வந்து வைத்தது என்பதை தீவிரமாக போலீஸ் படையினர் அதிரடி விசார ணையே மேற்கொண்டனர். இந்த படையில் சிறப்பு உதவி ஆய்வாளர் குருசாமி காவலர் சையது கரி முல்லா மற்றும் நாய் படையின் சிறப்பு கண்டுபிடிப்பு தனி உதவி ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் சுற்றி சுற்றி வந்தனர். அந்த நேரம் சென்ட்ரல் ரயில் நிலையம் பரபரப்பாக இருந்தது.