கோவை கல்லூரி பேராசிரியர் வீட்டில் 38 பவுன் நகை கொள்ளை

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம். இந்திரா கார்டன் ரோட்டில் உள்ள விவேகானந்தா நகர், 5 – வது வீதியைசேர்ந்தவர் மோகன் குமார் ( வயது 53) இவர் பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு கவுண்டம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 38 பவுன் நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து மோகன் குமார் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.