போலீஸ் சோதனையில் சிக்கிய 344 கிலோ கஞ்சா தீயில் போட்டு எரிப்பு

கோவை மாநகர், சேலம் மாநகர், திருப்பூர் மாநகர், கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் 619 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட 344..138 கிலோ கிராம்கஞ்சா கோவை சரக டி.ஐ.ஜி .சரவணசுந்தர், மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முன்னிலையில் செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் எரியூட்டும் ஆலையில் நேற்று எரித்து அழிக்கப்பட்டது. இதற்காக ஒவ்வொரு மாவட்டங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை போலீசார் மூட்டையாக கட்டிக் கொண்டு வந்தனர். எரித்து முடித்த பிறகு அங்கிருந்த போலீசார் அனைவரும் போதை பொருள் தடுப்பு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.