இந்து முன்னணி விநாயகர் சதுர்த்தி விழாவினை ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது கோபி நகர இந்து முன்னணியின் சார்பாக 33 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவானது இந்துஎழுச்சி திருவிழாவாக செப்டம்பர் 5. முதல் 7.வரை கோபி நகரப் பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் நிறைவாக விசர்ஸன ஊர்வலமானது மேளதாளங்கள் முழங்க பல்வேறு தமிழக கலாச்சார கலை நிகழ்ச்சிகள் 20 அடி உயர வீர ஆஞ்சநேயர் ரதம் 108 பெண்கள் விநாயகர் சிலைகளுடன் அணிவகுக்க, விசர்ஜன விநாயகர் திருமேனிகள் கோபி பச்சைமலை திருப்பணிக்குழு தலைவர் சேந்தன் கந்தன் குரூப்ஸ் பி கே ஈஸ்வரன் அவர்களால் சீதா கல்யாண மண்ட பத்தில் இருந்து காவிக்கொடி அசைத்து துவங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாரதியஜனதா கட்சி மாநில செயலாளர் எஸ் ஜி சூர்யா அவர்கள் மாநில செயலாளர் வி எஸ் செந்தில்குமார் அவர்கள் மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரபாகரன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் ரவீந்திரன் சுபி தளபதி மகாலிங்கம் ராமசாமி சிற்பி மகேஸ்வரன் குமார் மனோஜ் குமார் முருகையன் ஆகியோர் கலந்து கொண்டனர்மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரபாகரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன் இந்து அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர் குரு ராஜேந்திரன் ஆகிய முன்னிலையில் திருமதி கீதா ரவிச்சந்திரன் டாக்டர் சித்ரா கணேசன் லோகிதா வெள்ளிங்கிரி மற்றும் வழக்கறிஞர் கீர்த்தனா சித்தார்த் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தனர். இதன் ஒரு பகுதியாக நிறைவு விழா பொதுக்கூட்டமானது எம்ஜிஆர் சிலை அருகே இந்து முன்னணியின் ஈரோடு மேற்கு மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது மாநிலச் செயலாளர் வி ஏ செந்தில்குமார் சிறப்புரை ஆற்றினார் மற்றும் பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் எஸ் ஜி சூர்யா அவர்கள் எழுச்சி உரை ஆற்றினார் மற்றும் ஊர்வலம் சீதா மண்டபத்தில் ஆரம்பித்து ஜீவா செட் புதுப்பாளையம் பிரிவு பஸ் நிலையம் சிக்னல் மார்க்கெட் எம்ஜிஆர் சிலை கடைவீதி தேர் வீதி வாய்க்கால் ரோடு வழியாக சென்று சந்தியா வனத்துறை வாய்க்காலில் கரைக்கப்பட்டது மற்றும் நிகழ்ச்சியில் பெண்கள் குழந்தைகள் பொதுமக்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்ட டேரர் கலந்து கொண்டு விழாவினை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0