கோவை சீரநாயக்கன்பாளையம் ராதாகிருஷ்ணன் வீதியைச் சேர்ந்தவர் கோபி குமார். இவரது 17 வயது மகள் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் கடந்த கடந்த 16ஆம் தேதி தனது தோழி மோனிகாவுடன் மருதமலை செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார் . இது குறித்து தந்தை கோபுக்குமார் கோவை மேற்கு பகுதி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இதேபோல கோவை பொன்னையராஜபுரத்தை சேர்ந்தவர் சராபத் சமல்லா. இவரது 16 வயது மகள் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவரும் நேற்று முன்தினம் திடீரென்று மாயமாகிவிட்டார். இது குறித்து மேற்கு பகுதி அனைத்து பெண்கள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
செல்வபுரம் பக்கம் உள்ள பனைமரத்தூர் முனீஸ்வரன் கோவில் வீதி சேர்ந்தவர் ஆனந்தராஜ், இவரது மகள் ஸ்ரீமதி ( வயது 19 ) இவர் பூசாரிபாளையம் விவசாய பல்கலைக்கழகத்தில் உள்ள ஜெராக்ஸ் மையத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவரது தந்தை ஆனந்தராஜ் செல்வபுரம் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.