கோவை அரசு கலைக் கல்லூரி ரோட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் இன்று மதியம் 11 மணி அளவில் 3 பெண்கள் நடுரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு ரேஸ் கோர்ஸ் போலீசார் விரைந்து சென்று அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் பெண் போலீசாரின்பிடியிலிருந்து திமிரி ரோட்டில் படுத்து உருண்டனர். இதனால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.பின்னர் ரோந்து வாகனம் வரவழைக்கப்பட்டு அந்த 3 பெண்களும் காரில் ஏற்றி செல்லப்பட்டனர். கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த சூர்யா, சங்கரகிருஷ்ணன், ஹரி உட்பட 3 பேரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து கஞ்சா விற்றதாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதைகண்டித்து இந்த மறியலில் ஈடுபட்டதாக அவர்கள் கூறினார்கள். இவர்கள் 3பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0