கோவையில் குட்கா விற்ற 3 வியாபாரி கைது.

கோவை ஆர். எஸ். புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் நேற்று மாலை காந்தி பார்க் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போதுஅங்குள்ள ஒரு பெட்டி கடையில்திடீர் சோதனை நடத்தினார். அங்கு தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டது. அங்கிருந்த 12 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது இது தொடர்பாக ஆர். எஸ். புரம், சிவசுப்பிரமணிய வீதியைச் சேர்ந்த மோகன்ராம் (வயது 49) தெலுங்கு பாளையம் நாராயணசாமி நகர் சரவணராஜ் (வயது 52 ) பூ மார்க்கெட் தேவாங்கா ஸ்கூல் ரோட்டை சேர்ந்த ஹரிஹரன் ( வயது 21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.குட்காவுடன் 2 செல்போன், ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.