ஓடும் பஸ்சில் பெண் ஊழியரிடம் 3 பவுன் தாலி செயின் திருட்டு.

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம்அருகே உள்ள பூச்சியூர், கிரீன் கார்டனை சேர்ந்தவர் பிரதீப், இவரது மனைவி வினோதினி ( வயது 29) தனியார் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் சிவானந்த காலனியில் இருந்து நரசிம்மநாயக்கன்பாளையத்துக்கு தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாப்பில் பஸ்சை விட்டு இறங்கும்போது அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தாலி செயினை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர். இது குறித்து வினோதினி சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.