கோவை ராமநாதபுரம் பாலாஜி நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி சாந்தி (வயது 53) கோவையில உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று 1 சி டவுன் பஸ்சில் பயணம் செய்தார். ராமநாதபுரம் சவுரிபாளையம் பிரிவில் பஸ்சில் இருந்து கீழே இறங்கினார். அப்போது இவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை காணவில்லை, யாரோ ஓடும் பஸ்சில் திருடிவிட்டனர். இது குறித்து சாந்தி ராமநாதபுரம் போலீஸ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0