சட்டவிரோதமாக மது விற்ற 3 பேர் கைது. 72 பாட்டில்கள் பறிமுதல்.

கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்,சப் இன்ஸ் பெக்டர் ஜெசிஸ் உதயராஜ் ,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார்ஆகியோர்நேற்று மாலை சிங்காநல்லூர் – வெள்ளலூர் ரோட்டில் ரோந்து சுற்றிவந்தார். அப்போது அங்கு ள்ள ஒரு பாலத்துக்கு அடியில் நின்று சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதைவிற்பனை செய்த வெள்ளலூர் இடையர் வீதியைச் சேர்ந்த செல்வராஜ் ( வயது 61) கைது செய்யப் பட்டார். அவரிடம் இருந்து 33 மது பாட்டில்களும், ஒரு செல்போன் மது விற்ற பணம் ரூ 1200பறிமுதல் செய்யப்பட்டது இதே போலகணபதி, டெக்ஸ்டூல் பாலத்துக்கு அடியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்துகள்ள சந்தையில் விற்பனை செய்ததாக காத்திபுரம் 6-வது வீதியைச் சேர்ந்த தேவராஜ் ( வயது 58) பேரூர் செட்டி பாளையம் இந்திரா நகர் பிரகாஷ் ( வயது 34 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வடவள்ளி சேர்ந்த ரங்கராஜ் என்பவர் தலைமறைவாகிவிட்டார் இவர்களிடம் இருந்து 29 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.. 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.