கோவையில் ஒரே நாளில் சாலை விபத்தில் 3 பேர் பரிதாப பலி..

கோவை : மதுரை பக்கம் உள்ள வண்டியூரை சேர்ந்தவர் பாலமுருகன் இவரது மகன் சரவணக்குமார் ( வயது 23)நேற்று இவரும் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் புன்னப்பட்டியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ( வயது 22) என்பவரும் பைக்கில் பாலக்காடு- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். கோபாலபுரம் திருவள்ளூர் சிலை அருகே சென்ற போது நிலை தடுமாறி எதிரே வந்த வேன்மீது பைக் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். வழியில் சரவணகுமார் இறந்தார். வெங்கடேஸ்வரன் படுகாயத்துடன் பொள்ளாச்சியில் சிகிச்சை பெற்று வருகிறார், இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே போல பொள்ளாச்சி பக்கம் உள்ள சின்னாம்பாளையம் டைமன்ட் காலனியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் ( வயது 52) நேற்று இவர் உடுமலை ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள மின் மயானம் அருகே சென்ற போது திடீரென்று நிலைத்தடுமாறு கீழே விழுந்தார் .இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்க்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து அவரது மகன் சர்வேஸ்வரன் பொள்ளாச்சி டவுன் கிழக்கு பகுதி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல அன்னூர் ஒட்டர்பாளையம், புது காலணியை சேர்ந்தவர் சின்ன முத்தான் (வயது 63) இவர் நேற்று அன்னூர் மின்மயானம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த காரும் லாரியும் இவர் மீது மோதியது .இதில் படுகாயம் அடைந்த சின்னமுத்து அதே இடத்தில் இறந்தார். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.