நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது வெடித்து சிதறி 3 பேர் சாவு. 14 பேர் படுகாயம்.

கோவை: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ரோடு பாண்டியன் நகர் அருகே உள்ள பொன்னம்மா நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 44) இவரது மனைவி சத்திய பிரியா ( வயது 34) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். வீட்டின் கீழ்தளத்தில் கார்த்தி குடும்பத்துடன் வசித்து வருகிறார். முதல் தளத்தில் உள்ள 3 அறைகளில் சிலர் வாட கைக்கு குடி இருந்தனர் .நேற்று மதியம்12 மணியளவில் கார்த்திக் வீட்டிலிருந்து வெடிகுண்டு வெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அந்த கட்டிடத்தில் இருந்து கரும்புகைகள்வெளியேறியது. அக்கம் பக்கத்தினர் ,வீதியில் நின்றவர்கள் அலறி அடித்தபடி ஓட்டம் பிடித்தனர். இந்த விபத்தில் கார்த்திக் வீட்டின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தவுடன், அங்கிருந்த மளிகை கடை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. இதே போன்று எதிரில் இருந்த 10 க்குமேற்பட்ட காம்பவுண்ட் வீடுகளில் மேற்கூரைகள் ஓடுகள் உடைந்து சேதமடைந்தன. தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு பகுதி தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மேலும் தீ பரவாது தடுத்து அனைத்தனர். அப்போது அடையாளம் தெரியாத பெண் ஒருவர் உடல் சிதறி பிணமாக கிடந்தார். மேலும் இந்த விபத்தில் மளிகை கடை உரிமையாளர் சக்திவேல் மனைவி செல்வி (வயது 45) பக்கத்து வீடுகளில் வசிக்கும் குமார் ( வயது 37 )அபுல் ஹசன் சகிலா பானு தம்பதியின் 9 மாத குழந்தை ஆலியா ஷெரின் ,பெருமாள் ( வயது 65) சம்பா காயத்திரி (வயது 20) தருண்குமார் ( வயது 20 )மன்னுக்குமார் ( வயது 8) ஹர்சித் ( வயது 5 )ஹன்சிகா ( வயது 10) சத்யபிரியா ( வயது 40 )சந்திரா (வயது 55) இலக்கியா (வயது 33) பரமேஸ்வரி (வயது 52) தியா சவுத்ரி ( வயது 11) நிரஞ்சனா (வயது 6) பிரியா மேகலா (வயது 32) ஆகியோர் படுகாயம் அடைந்தனர் .இதில் குழந்தை ஆலியா ஷெரின் மற்றும் குமார் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவ மனையில் குழந்தைகள் உள்பட 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்..இதில் காய மடைந்த சிறுமிகள் தியா ( வயது 11) நிரஞ்சனா ( வயது 11 )ஆகியோர் மேல் சிகிச் சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெடி விபத்து ஏற்பட்ட வீட்டின் உரிமையாளரான கார்த்திக் மனைவியின் அண்ணன் சரவணகுமார் என்பவர் ஈரோடு மாவட்டம் நம்பியூரில் உரிமம் பெற்று பட்டாசு கடை நடத்தி வந்துள்ளார். தற்போது அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் உரிமம் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது. கோவில் திருவிழாவுக்காக சரவணகுமார் திருப்பூர் பாண்டியன் நகரில் உள்ள தனது தங்கை வீட்டில் நாட்டு வெடி களை தயாரித்து வந்த நிலையில் நேற்று மதியம் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.