கோவையில் ஒரே நாளில் சாலை விபத்தில் 3பேர் சாவு.

கோவையில் நேற்று நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 3பேர் பலியாகியுள்ளனர். அதன் விவரம் வருமாறு:- கோவை ஆர். எஸ் .புரம். ராமச்சந்திரா ரோட்டை சேர்ந்தவர் அபிமன்யு (வயது 69) இவர் நேற்று மேட்டுப்பாளையம் ரோடு பூ மார்க்கெட் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத 4 சக்கர வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் அபிமன்யு படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து அவரது மகன் திருவேங்கட பிரபு மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்துள்ளார். இதேபோல நெல்லை மாவட்டம் ,கள்ளிகுளம் பக்கம் உள்ள மீனவர் குளதைச் சேர்ந்தவர் அய்யப்ப பிள்ளை .இவரது மகன் அருண்ராஜ் (வயது 20)இவர் நேற்று ஆர் .எஸ் . புரம் .கவுளி பிரவுன் ரோட்டில் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் அருண் ராஜ் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இதுகுறித்து மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வுபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோலவேலூர் மாவட்டம் ,காட்பாடி வேல் மயில் கிராமத்தைச் சேர்ந்தவர்மார்க்கபந்து. இவரது மகன் அஜித்குமார் (வயது 22 இவர் நேற்று சின்ன வேடம்பட்டி – இடிகரை ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அதே ஊரை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 24) இருசக்கர வாகனத்தில் பின்னால் இருந்தார். இவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் சென்ற வாகனம் இடிகரை ரோட்டில் செல்லும்போது திடீரென்று நிலைத்தடுமாறு இருவரும் கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காகஅரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அஜித்குமார் இறந்தார். ஸ்ரீதர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வுபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.