8 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது

கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத்நிஷா, சப் இன்ஸ்பெக்டர அய்யா சாமி ஆகியோர் நேற்று காந்திபுரம் திருவள்ளூர் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது சந்தேகப்படும்படி 2 இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேரைபிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இது கடத்தி வந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சின்னசாமி (வயது 27) மருது பாண்டி (வயது 20) கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த ஜாய்ஸ் ஜோசப் ( வயது 30) ஆகியோரை கைது செய்தனர். ராஜா, மொட்ட அண்ணன் ஆகியோர்தப்பி ஓடிவிட்டனர். இவர்களிடமிருந்து கஞ்சாவும்,
2 இருசக்கர வாகனங்களும், 3செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.