கோவையில் 2020 போதை மாத்திரைகளுடன் 3 பேர் கைது.

கோவை மதுவிலக்கு அமுல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்று கோவை ரயில் நிலையம்பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 2020 போதை மாத்திரைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது போதை மாத்திரைகளும் , 3 ரயில் டிக்கெட்டுகளும், 3செல்போனும்பறிமுதல் செய்யப்பட்டது. இதை யடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் பெயர்முகமதுதரீக் ( வயது 24) போத்தனூர் மேட்டூர் சாதிக் (வயது 25)தெற்கு உக்கடம் பைபாஸ் ரோடு சன்பர் ரகுமான் ( வயது 23 )என்பது தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.