கேரள லாட்டரி சீட்டு விற்பனை செய்த 3பேர் கைது.

கோவை; பொள்ளாச்சி தாலுகா போலீஸ்சப் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் நேற்று கோபாலபுரம் செக்போஸ்ட் பகுதியில் ரோந்துசுற்றி வந்தார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை ,மாங்காட்டு பகுதியைச் சேர்ந்த துரைசாமி (வயது 55) கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 52 கேரளா லாட்டரி டிக்கெட்பறிமுதல் செய்யப்பட்டது இதே போல மதுக்கரை சப்- இன்ஸ்பெக்டர் பாண்டியராஜ் நேற்று மதுக்கரை பைபாஸ் ரோட்டில் உள்ள பாலம் அருகே திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்டம், விஜயபுரம் வி. எஸ் .கே .நகரை சேர்ந்த சசிகுமார் ( வயது 43)சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் வடிவேல் சுப்பிரமணி ( வயது 54) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து மொத்தம் 52 கேரள மாநில லாட்டரி டிக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.