கோவை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் பாதுகாப்பறையில் வைக்கப்பட்டுள்ளன. கலெக்டர் கிராந்தி குமார் மற்றும் பொது பார்வையாளர்கள் தலைமையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியாக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்கு பதிவு எந்திரங்களின் அறை பூட்டிசீல் வைக்கப்பட்டது. அத்துடன் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை வடக்கு தொகுதியில் 292 மின்னணு வாக்குப்பதிவந்திரங்கள் – தெற்கு தொகுதியில் 275, சிங்காநல்லூர் 322, கவுண்டம்பாளையம் 425 ,சூலூர் 324, பல்லடம் 4 07 , என்று மொத்தம் 2,045 மின்னணு வாக்குப்பதிவு மந்திரங்கள் விவி. பேட்டரி எந்திரம், பேலட் ஆகியவை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த மையத்தில் துணை ராணுவத்தினர், சிறப்பு போலீசார், மற்றும் உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0