நடத்தையில் சந்தேகப்பட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட மனைவியின் உடலில் 29 குண்டுகள் பாய்ந்தது கண்டுபிடிப்பு..

கோவை; கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வண்டாழி ஈராட்டுக்குளம் என்ற ஊரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் ( வயது 52) இவரது மனைவி சங்கீதா ( வயது 46) இவர்களுக்கு 16 மற்றும் 13 வயதில் 2 மகள்கள் உள்ளனர். கிருஷ்ணகுமார் சில ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் வேலை செய்தார். அதன் பின்னர் அங்கிருந்து வந்து கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டணம், லட்சுமி நகரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். மேலும் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சுற்றுலா இடங்களுக்கு செல்ப வர்களுக்கு வழிகாட்டியாக (கைடு)பணியாற்றி வந்தார் . சங்கீதா கோவை சாய்பாபா காலனி உள்ள தனியார் பள்ளியில் நிர்வாக பிரிவில் ஊழியராக வேலை செய்து வந்தார். அவர்களது மூத்த மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 மற்றும் இளைய மகள் 8-ம் வகுப்பு படிக்கின்றனர் .இந்தநிலையில் சங்கீதா கோவையில் உள்ள ஒரு டாக்டருடன் நெருங்கி பழகுவது கிருஷ்ணமாருக்கு தெரியவந்தது. இதனால் அவரது நடத்தையில் சந்தேகப்பட்ட கிருஷ்ணகுமார் தனது மனைவியை கண்டித்ததார். மேலும் டாக்டருடன் பழகுவது நிறுத்துமாறு தெரிவித்தார் ஆனால் சங்கீதா கண்டுகொள்ளவில்லை .இதன் காரணமாக கணவன் – மனைவியை அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில்வெறுப்படைந்த கிருஷ்ணகுமார் மனைவியைசுட்டு கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று முன்தினம் காலையில் 2 மகள்களும் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர். பின்னர் சங்கீதாவிடம் டாக்டருடன் பழக்கம் குறித்து கிருஷ்ணகுமார் கேட்டார். இதனால் அவளுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது .அப்போது ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார் தான் வைத்திருந்த துப்பாய்க்கியால் சங்கீதாவை சுட்டார். இதில் குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலே சென்று பரிதாபமாக இறந்தார். இதை தொடர்ந்து கிருஷ்ண குமார் தனது காரை எடுத்துக்கொண்டு தனது சொந்த ஊரான வண்டாழிக்கு சென்றார் .அங்கு உறவினர்களிடம் தனது மனைவியை சுட்டுக் கொலை செய்துவிட்டு வந்திருப்பதாக கூறினார் .சிறிது நேரத்தில் அவரும் தனக்குதானே துப்பாக்கியால்சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பிறகு பாலக்காடு போலீஸ் சார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டனர் .மேலும் சங்கீதாவைகிருஷ்ணகுமார்சுட்டு கொலை செய்த விவரத்தை கோவை மாவட்ட போலீசாருக்கு தெரிவித்தனர். இதை யடுத்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுடாக்டர். கார்த்திகேயன் மற்றும் சூலூர் போலீசார் விரைந்து சென்றனர். அங்குசுட்டு கொலை செய்யப்பட்டு கிடந்த சங்கீதாவின்உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சங்கீதாவை சுட்டுக்கொலை செய்தது தொடர்பாக சூலூர் போலீசாரும், கிருஷ்ணகுமார் துப்பாக்கி சுட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து குறித்து பாலக்காடு போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தோட்டத்தில் பயிர்களை சேதப்படுத்த வரும் பன்றிகளை சுட்டு விரட்டுவதற்கு உரிமம்பெற்று துப்பாக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. கோவையில் மனைவியை சுட்டுக் கொன்று விட்டு கிருஷ்ணகுமார் பாலக்காடு நோக்கி காரில் செல்லும் போது பட்டணம் குடியிருப்போர் சங்கத்தின் வாட்ஸ் அப் குழுவில் குழுவில் தனது குடும்ப பிரச்சனை குறித்தும் மனைவியை சுட்டுக்கொலை செய்ததுகுறித்தும் பேசி பதிவிட்டு இருந்ததுதெரியவந்தது அதில் அவர்கூறியிருப்பதாவது:- இதுவரை நான் எனது மகள்களுக்காக தான் வாழ்ந்து வந்தேன். எனது குழந்தைகளையும் என்னுடன் பேசவிடாமல் தடுத்து விட்டாள். அதனால் நான் என்மனைவியை கொலை செய்து விட்டேன் .இது அவனுக்கு (டாக்டர்)உண்மையிலே வலியை கொடுக்கும். எனது மகள்களின் எதிர்காலத்தை கருதி தான் நான் இந்த முடிவெடுத்துள்ளேன். கண்டிப்பாக நான் அவனையும் சுட்டுக் கொல்வேன் என்று அவர் பதிவிட்டுள்ளார். இதனால் அவர் மனைவியுடன், டாக்டரையும் கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.கிருஷ்ணகுமார் உரிமம் பெற்ற துப்பாக்கி ஒன்று வைத்துள்ளார். ஆனால் தனது மனைவியை சுட்டுக் கொல்ல பயன்படுத்திய துப்பாக்கிக்கு உரிமம் இல்லை. இதனால் அவருக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி? என்பது தெரியவில்லை இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சங்கீதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடலில் மொத்தம் 29 குண்டுகள் பாய்ந்துள்ளது தெரியவந்தது.