கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கோயம்புத்தூர் மாநில வனக்கல்லூரி விளையாட்டுத்திடலில், 27-வது மாநில வனத்துறை விளையாட்டுப்போட்டிகள், செப் ,19.20, தேதி என இரண்டு நாட்கள் நடைபெற்றது , இதில் தமிழகத்தில் உள்ள கோவை, நீலகிரி,விழுப்புரம்,தர்மபுரி,திருவண்ணாமலை,வேலூர்,திருச்சி,மதுரை,திண்டுக்கல், திருநெல்வேலி,என பதினைந்துக்கும் மேற்பட்ட வனச்சரகத்தில் பல்வேறு பணிகளில் உள்ள ஊழியர்கள்,அலுவலர்கள் பங்கேற்ற தடகளம்,கபாடி, கோகோ,வாலிபால் ,பூபந்தாட்டம், என பல விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறைத் தலைவர்,முனைவர்.சுதான்சு குப்தா,முன்னிலையில் ,அரசு முதன்மை செயலாளர் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செந்தில்குமார் தலைமையில், வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் சிறப்புரை ஆற்றினார், முன்னதாக வனத்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு விளையாட்டு கொடியினை ஏற்றி வைத்தார், தொடர்ந்து வனத்துறையினர் விளையாட்டுப்போட்டிகளை துவக்கி வைத்தார், விழாவில் அரசு வன உயர் அலுவலர்கள், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை திட்ட இயக்குனர்.(TBGP CCR) அன்வர்தீன் வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர், அலுவலர்கள் பங்கேற்றனர், இதில் தேசிய அளவில் தமிழக வனத்துறையினர் பங்கேற்ற போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கமும் ,கோப்பையை வென்றவர்களையும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களையும் பாராட்டி பரிசுகளையும் ,சான்றிதழ்களை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கி கவுரவித்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசுகையில் இங்கு நடந்த போட்டியில் தேர்வானவர்கள் அகில இந்திய வனத்துறை சார்பில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறுவார்கள் என்றார். மாஞ்சோலை விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்ற பட்சத்தில் அரசு நிலைப்பாட்டை தெரிவித்து விட்டதாகவும் நீதிமன்றத்தில் அந்த வழக்கு இருப்பதால் அதைப்பற்றி பேசவில்லை என்றார், யானை வழித்தடங்கள் எங்கே இருக்கிறது என்பதை கண்டறிந்து ஆராய்ந்து வருவதாகவும் இது குறித்து சட்ட சபையிலும் தான் பேசியிருப்பதாகவும் தெரிவித்தார். யானைகள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது நல்ல விஷயம் என தெரிவித்தவர் இதன் மூலம் வனத்துறை எந்த அளவிற்கு செயல்படுகிறது வனவிலங்குகளை எந்த அளவிற்கு பாதுகாக்கிறது என்பதற்கான அறிகுறி எனறார்,மனித விலங்கு மோதல்கள் நடந்தால் அதற்கான வனத்துறை அதிகாரிகளுக்கு குழு இருப்பதாகவும் அது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனறார்.
மனித வனவிலங்கு மோதல் என்பது நம் மாநிலத்தில் மட்டுமில்லாமல் அனைத்து இடங்களிலும் இருப்பதாக தெரிவித்த அமைச்சர் அதிகம் உள்ள இடங்களில் தனி கவனம் செலுத்தி வருவதாகவும் அந்தந்த மாவட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கி நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார் . நம்மைப் பொறுத்தவரை ஒவ்வொரு விஷயத் தையும் படிப்படியாக நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார். மேலும் வனத்தையொட்டி அனைத்து ரிசார்ட்டுகளும் அனுமதி இல்லாமல் இயங்கவில்லை எனவும், ரிசார்டுகளுக் கெல்லாம் உரிமம் இருப்பதாகவும் உரிமம் இல்லாமல் இயங்குவதை தெரிந்தால், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மேலும் புலிகளை வனத்திற்குள் விடுவது தான் எங்கள் நோக்கம் என தெரிவித்தார்.
மருதமலை பகுதியில் இருக்கும் குப்பை கிடங்கை எடுப்பது குறித்து மாவட்ட ஆட்சி யரிடம் பேசுவதாக கூறினார். மேலும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஊதியம் குறித்து பரிசோதித்து வருவதாகவும் ஒவ்வொன்றாக நிறைவேற்றுவோம் எனவும் தெரிவித்தார். மேலும் மனித விலங்கு மோதலால் ஏற்படும் விளைவுகளுக்கான நிவாரணத்தை முதலமைச்சர் அதிகப்படுத்தியும், விரைவு படுத்தியும் இருப்பதாக தெரிவித்தார். யானைகளை வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் இருப்பதற்கு தற்பொழுது பல்வேறு நவீன கருவிகள் வந்திருப்பதை குறிப்பிட்ட அமைச்சர் இவற்றை கோவை வனப்பகுதியில் வைத்து ஆய்வு செய்து வருவதாகவும் வனத்துறை நிதியில் பல்வேறு புதிய நவீன கருவிகளை வாங்கி ஒவ்வொன்றாக பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவித்தார்.,தமிழ்நாட்டில் 40 ட்ரக்கிங் சாலைகளை கண்டறிந்துள்ளதாக தெரிவித்த அவர் கூடிய விரைவில் விளையாட்டு துறை அமைச்சர் அதனை திறந்து வைக்க இருப்பதாகவும் அது குறித்தான விவரங்கள் ஆன்லைனில் தெரியப்படுத்தப்படும் என்றார்.
நன்னீர் நாய்கள் குறைந்தது குறித்தான கேள்விக்கு , மிகவும் தெரியபட்ட விலங்குகள் எல்லாம் தற்பொழுது அரிய வகை விலங்குகளாக மாறிவிட்டதாகவும் அது குறித்து கவனம் எடுத்து நடவடிக்கை மேற்கொள்வோம் தற்போது வரையாடுகள் மீது அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.