சென்னை: தமிழ்நாட்டில் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள் சென்னை காவல்துறை தலைமையக ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் சென்னை தலைமையிட ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க், சென்னை மாரகர வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தலைமையிட கூடுதல் ஆணையர் லோகநாதன் மதுரை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை ஐஜி சுதாகர் சென்னை போக்குவரத்து காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், தென் மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகர காவல் ஆணையராக காமினி நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகர காவல் ஆணையராக லோகநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு மண்டல ஐஜியாக புவனீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவில் சப்ளை சிஐடி பிரிவு டிஜிபி ஆக வன்னிய பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரி டிஜிபி ஆக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு ஏடிஜிபி ஆக பாலநாகதேவி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐஜி சந்தோஷ் குமார், லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மற்றும் இணை இயக்குநராகவும், TANGEDCO லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக பிரஜ் கிஷோர் ரவியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி அபின் தினேஷ் மொடாக், மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் டிஜிபியாக அபின் தினேஷ் மோடக் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை சரக டிஐஜியாக ரம்யா பாரதி நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை சரக டிஐஜியாக இருந்த பொன்னி காஞ்சிபுரம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜியாக இருந்த பகலவன் திருச்சி சரக டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி சரக டிஜிபியாக இருந்த சரவண சுந்தர் கோவை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த ராஜேந்திரன், சிஐடி நுண்ணறிவு பிரிவு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாக இருந்த கபில்குமார் சரத்கர் சென்னை காவல் ஆணையராக தலைமையக ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர காவல் வடக்கு இணை ஆணையராக இருந்த ரம்ய பாரதி ஐபிஎஸ் மதுரை சரக டிஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி சரக டிஐஜி ராஜேந்திரன் ஐபிஎஸ் இன்டெலிஜென்ஸ் சிஐடி டிஐஜி யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.