கோவை, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இந்து முன்னணி இந்து மக்கள் கட்சி பாரத் சேனா கிளைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது அதுபோன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிறிய அளவி லான சிலைகளை வைத்து வழிபட்டனர் விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் பல இடங்களில் சில சிலைகள் நீர் நிலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன அத்துடன் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் கோவையில் உள்ள சிங்காநல்லூர் முத்தண்ணன்குளம் ஆகியவற்றில் கரைக்கப்பட்டன அது போன்று கடந்த 19ஆம் தேதி மட்டும் 1500க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன. இந்த நிலையில் இந்து முன்னணி உட்பட இந்து அமைப்புகள் சார்பில் மாநகரப் பகுதியில் வைக்கப்பட்ட சிலைகள் கரைப்பு ஊர்வலம் – பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தசரதன் முன்னிலை வகித்தார். காமாட்சிபுரிஆதீனம் இரண்டாவது சன்னிதானம் பஞ்சலிங்கஸ்வர சுவாமிகள் பேசினார். இதில் மத்திய அமைச்சர் எல். முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார், நிர்வாக குழு உறுப்பினர் எஸ். சதீஷ் கோட்ட செயலாளர் பாபா கிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் உட்பட பலர்கலந்து கொண்டனர் பின்னர் அங்கிருந்து முத்தண்ணன் குளத்துக்குஊர்வலம் சென்றது ..அங்கே ஏற்கனவே தயாராக இருந்த பகுதியில் 258 விநாயகர் சிலைகள் பலத்த பாதுகாப்புடன் கரைக் கப்பட்டன. முன்னதாக இந்த ஊர்வலத்தில் போலீஸ் கமிஷனர் தலைமையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர். ஊர்வலத்தை யொட்டி மாநகரப் பகுதியில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப் பட்டிருந்தன. மாநகரில் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்ற பகுதி மற்றும் அவற்றை கரைக்கும் இடத்துக்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரடியாக சென்று ஆய்வு செய்ததுடன் அங்கு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கவனித்தார். சிலைகளை கரைக்கும்பணியில் தீயணைப்பு படை வீரர்களுடன்இந்து அமைப்பு நிர்வாகிகளும் ஈடுபட்டனர். இது தவிர பொதுமக்கள் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த சிறிய சிலைகளும் முத்தண்ணன்குளம், சிங்காநல்லூர் குளம் செங்குளம் ஆகியவற்றில் கரைக்கப்பட்டன.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0