குடியரசு தின விழாவை முன்னிட்டு  கோவையில் 2,500 போலீசார் பாதுகாப்பு..

நாடு முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது இதன் காரணமாக முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அது போன்று கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது .கோவையில் பொதுமக்கள் அதிகம் கூடும் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் சாலை ஆகிய பகுதிகளில் இருக்கும் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் அவிநாசி ரோடு, சத்தி ரோடு, ஆகிய பகுதியிலிருக்கும் வணிக வளாகங்கள் ஆகியவற்றில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது கோவை மாநகர் பகுதியில் 1,500 போலீசாரும், புறநகர் பகுதியில் 1000 போலீசாரும் என கோவை மாவட்டத்தில் மொத்தம் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் .மாநகர பகுதியில் அனைத்து சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதே போல ஓட்டல்களில்சோதனை நடத்தப்பட்டு அங்கு தங்கி இருப்பவர்கள் பற்றிய விவரங்கள் கண்டறியப்படுகிறது.கோவை விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள் .இது தவிர “மெட்டல் டிடெக்டர்” கருவி, மோப்பநாய் உதவியுடன் கோவையில் முக்கிய இடங்களிலும் மற்றும் ரயில் நிலையங்களில், தண்டவாளப் பகுதிகளிலும், பாலங்கள் உள்ள இடங்களிலும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். கொடி யேற்று விழா நடைபெறக்கூடிய சிதம்பரம் பூங்கா மைதானம்போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.அனைத்து வழிபாட்டு தலங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.