எலக்ட்ரானிக் கடையில் ரூ.25 லட்சம் மோசடி. பெண் ஊழியர் கைது.

கோவை புரூக் பாண்ட் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் எலக்ட்ரானிக் கடை செயல்பட்டு வருகிறது.இங்கு விற்பனையை ஆய்வு செய்த போது ரூ 24 லட்சத்து 81 ஆயிரத்து 894 மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதுஇது குறித்து அந்த நிறுவனத்தின் மேனேஜர் சிவராமன் ஆர் .எஸ் . புரம். போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.விசாரணையில்இங்குவிற்பனையாளராக பணியாற்றி வரும் பன்னிமடை சாமுண்டீஸ்வரி கோவில் வீதியைச் சேர்ந்த முத்துக்குமார் மகள் கமலி ( வயது 32) என்பவர்கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதை யடுத்துபோலீசார் கமலியை நேற்று கைது செய்தனர்.இவர் பி.இ. பட்டதாரி ஆவார். இவர் மீதுமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.