திருச்சி அரசு மருத்துவமனையில் 24 மணி நேரம் காவல்துறை பாதுகாப்பு.

சமீபத்தில் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் கற்பழித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த கோர சம்பவத்தை கண்டித்து நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன மருத்துவர்களும் செவிலியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் மருத்துவமனைகளில் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் மருத்துவமனைகள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக மாற்ற கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறார்கள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் டாக்டர்களின் பாதுகாப்புக்கு பரிந்துரை செய்ய தேசிய அளவிலான குழு அமைக்கப்பட உள்ளது என்று தெரிவித்தனர். இதன் தொடர்ச் சியாக திருச்சி அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது இதற்காக மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில் போலீஸ் துணை கமிஷனர் விவேகானந்தாசுக்லா திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார் அதன் பின்னர் அரசு மருத்துவமனையில் எந்த நேரமும் போலீசார் பணியில் இருக்கவும் 24 மணி நேரமும் ரோந்து பணியில் இருக்கவும் அங்கு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால் பணியில் உள்ள போலீசாரிடம் தகவல் தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது இதை அடுத்து அரசு மருத்துவமனையில் விரைவில் 24 மணி நேரமும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத் தப்படுவார்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காவல்துறையின் இந்த அறிவிப்பானது மருத்துவர்கள் மத்தியில் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.