திருச்சி போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் கடந்த 20.19. 2021 ஆம் தேதி திருச்சி மாவட்டம் சமயபுரம் வாரச்சந்தை பகுதியில் வாகன சோதனை செய்த போது tn 72 a 2567 என்ற பதிவெ ண் கொண்ட ஈச்சர் லாரி யை மடக்கிப் பிடித்தனர். அந்த லாரியில் ஆறு சாக்கு பைகளில் 132 கிலோ கஞ்சா கடத்திக் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் தேனி மாவட்டம் காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த மூவேந்தரன் வயது 31. கரூர் வேலாயு தம்பாளையம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பிரபு வயது 42. ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு இது தொடர்பாக திருச்சி போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்ட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.இந்த வழக்கில் துணை கண்காணிப்பாளர் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு திருச்சி அவர்கள் புலன் விசாரணை முடித்து கடந்த6.02.2022 ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வ ழக்கா னது புதுக்கோட்டை போதைப்பொருள் தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி 30.7.2024 அன்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம் நிரூபிக்கப்பட்ட மூவேந்தரனுக்கு போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் இரு பிரிவுகளின் கீழ் தலா பதினோரு ஆண்டு கள் மற்றும் தலா ரூபாய் ஒரு லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் பிரபுவுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் ஒரு லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில் மூவேந்தரன் சிறை தண்டனை யை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து மற்றும் சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஜர் செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த புலன் விசாரணை அதிகாரி மற்றும் போலீசாரை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0