காருடன் 210 கிலோ குட்கா பறிமுதல். 2வியாபாரி கைது.

கோவை சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் நேற்று மாலை சிங்காநல்லூர் காமராஜ் ரோடு மனிஷ் தியேட்டர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகபடும் படி நின்று கொண்டிருந்த ஒரு ஆம்னி வேனில் திடீர் சோதனை நடத்தினார்கள். அதில்தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ( குட்கா ) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இதை கடத்தி வந்த சின்ன வேடம்பட்டி, சக்தி நகரை சேர்ந்த அருணாச்சலம் (வயது 25 )பீளமேடு செங்காளிப்பன் நகரை சேர்ந்த பொன் செல்வன்(வயது 38) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சுடலை கண்ணன் என்பவர் தப்பி ஓடிவிட்டார். மாருதி ஆம்னி வேன் ,210 கிலோ குட்கா , ரூ.4,250 பணம்ஆகியவை பறிமுதல் செய்யப் பட்டது. இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.