திருச்சி, சமீப காலமாக தமிழகத்தில் போலி மது பாட்டில்களை அடியோடு ஒழித்துக் கட்ட அமலாக்க பணியகம் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் இயக்குனர் முனைவர் அமல்ராஜ் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.அதன் பலனாக மாநிலத்தில் நடந்த முக்கிய சோதனையில் பதுக்கி வைத்திருந்த 2018 போலி மது பாட்டில்களை கண்டுபிடித்தனர். அது பற்றிய முழு விவரம் வருமாறு முருகன் என்கிற முருகவேல் தகப்பனார் பெயர் சுப்பையா அந்தோணியார் கோயில் தெரு விமான நிலையம் திருச்சி என்பவன் போலி மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை கிடைத்த நம்ப தகுந்த தகவலின் பேரில் மத்திய நுண்ணறிவு பிரிவு திருச்சி மண்டலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமன் மற்றும் அவரது குழுவினர் திருச்சி நகரில் எடைமலைப்பட்டி புதூர் என்ற இடத்திற்கு சென்று முருகன் என்கிற முருகவேல் தகப்பனார் பெயர் சுப்பையா என்பவனை கைது செய்து அவன் பதுக்கி வைத்திருந்த 644( 750)மி லி போலி மது பான பாட்டில்கள் ஹாலோ கிராம் 1305 எண்ணிக்கை ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ரூபாய் 22650ஐ கைப்பற்றினர். விசாரணையில் மேற்படி குற்றவாளிக்கு பெங்களூரில் இருந்து போலி மது பான பாட்டில் களை பிளாஸ்டிக் டிர ம்மில் அடைத்து வைத்து பொன் புரு யர் லாஜிஸ்டிக் மூலமாக திருச்சி கொண்டு வந்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதன் தொடர் நடவடிக்கையாக மத்திய நுண்ணறிவுப் பிரிவு மதுரை மண்டலம் குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை ரோடு பெரிய வள்ளி குளம் லட்சுமிபதி நகரில் குற்றவாளி வீரராஜ் தகப்பனார் பெயர் கதிரேசன் லட்சுமிபதி நகர் பெரிய வள்ளி குளம் விருதுநகர் என்பவனை கைது செய்து அவனது வீட்டை சோதனை செய்ததில் அவன் பதுக்கி வைத்திருந்த 264(750மி லி ) போலி மது பாட்டில்கள் கைப்பற்றப் பட்டது. இதே போல் மேற்படி தகவல் திருநெல்வேலி மாநகர காவல் துறை அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் திருநெல்வேலி மாநகரம் வண்ணாரப்பேட்டை கம்பராமாயணம் தெருவில் உள்ள ஒரு வீட்டை சோதனை செய்ததில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1110 போலி மதுபான பாட்டில்களை 797 லிட்டர் மற்றும் 1 ரோல் ஹாலோ கிராம் கைப்பற்றப்பட்டது. மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை பிடிக்க மத் திய நுண்ணறிவுப் பிரிவு வேலூர் மண்டலம் இளங்கோ தலைமையில் குழுவினர் பெங்களூர் சென்று போலி மதுபான கடத்தலுக்கு உடந்தையாக இருந்த குற்றவாளி கேசவமூர்த்தி தகப்பனார் பெயர் அஸ்வந்தப்பா என்பவனை கைது செய்தனர். அவனது வாக்கு மூலத்தின் அடிப்படையில் பெங்களூர் அருகே உள்ள நாகசந்தராவில் போலி மதுபானம் பதுக்கி வைத்திருந்த குடோன் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கங்கனஹள்ளி மாத நாயகன ஹள்ளி என்ற இடத்தில் போலி மதுபானம் தயாரிக்கும் ஆலை கண்டறியப்பட்டு மேற்படி தகவல் பெங்களூர் காவல் துறை யினருக்கு சிறப்பு அறிக்கை மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இச்சோதனை மதிய நுண்ணறிவுப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் சென்னை வி. சியாமளாதேவி அமலாக்கத் துறையின் தலைவர் சென்னை எம் எம் மயில்வாகனன் அவர்களின் மேற்பார்வையில் நடத்தப்பட்டது. மேற்படி போலி மது பாட்டில்கள் பரி முதலில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகளையும் தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் அவர்களும் மற்றும் அமலாக்க பணியகம் குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் காவல் துறை இயக்குனர் முனைவர் அமல்ராஜ் அவர்களும் வெகுவாக பாராட்டினார்கள். இது போன்ற குற்றங்களை தடுக்க பொதுமக்கள் மதுவிலக்கு காவல் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா சேவை எண் 10581 அல்லது 9498410581 என்னை தொடர்பு கொண்டு தகவல்கள் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.தகவல்கள் அளிப்ப வர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0