கோவை; டாஸ்மாக் கடைகள் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்குகிறது. ஆனால் கோவை புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மது பாட்டில் களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது நடந்து வருகிறது .அதன்படி புறநகரில் உள்ள சாலை ஒர ஒட்டல், தாபா ஓட்டல்களில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து உணவு சாப்பிட வருபவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. இதை யடுத்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன்உத்தரவின் பேரில் டி.எஸ்.பி.க்கள் தங்கராமன் ,பாலாஜி ஆகியோர் தலைமையில் 60 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதில் மொத்தம் 200 போலீசார் இடம் பெற்றிருந்தனர். 60 தனிப்படை போலீசாரும் பல்வேறு குழுக்களாக பிரிந்து கருமத்தம்பட்டி, அன்னூர், காரமடை, மேட்டுப் பாளையம் பகுதிகளில் உள்ள சாலை ஒர ஒட்டல்கள்,குடில் தாபா ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சட்ட விரோதமாக மது விற்பனை மற்றும் மது அருந்து கிறார்களா? என்று சோதனை செய்யப்பட்டது. அதில் சில இடங்களில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும், உணவகங்களில் மது அருந்த அனுமதி அளித்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 145 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப் பட்டன இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என்று போலீஸ்சூப்பிரண்டு டாக்டர். கார்த்தி கேயன் தெரிவித்தார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0