ஆவடி காவல் ஆணையாக எல்லைக்குப் உட்பட்ட பகுதிகளில் போலீஸ் கமிஷனர் கி. சங்கர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு2024 முதல் இதுவரை ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் மூலமாக 247 வழக்குகள் பதிவு செய்து 410 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 813 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. 51 வழக்குகளில் குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 200 கிலோ கஞ்சா வினை நீதிமன்ற உத்தரவின்படி ஆவடி கூடுதல் ஆணையர் எஸ். ராஜேந்திரன் ஆவடி காவல் மாவட்ட துணை ஆணையர் ஐமன் ஜமால் மற்றும் த டய அறிவியல் இயக்குனர் விசாலாட்சி ஆகியோர்கள் கொண்ட போதை பொருள் அழிப்பதற்கான குழு அமைக்கப்பட்டு அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் தென் மேல் பக்கம் என்ற இடத்தில் ஜிஜே மல்டிகிலேவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் உள்ள எரிவாயு எரியூட்டம் இயந்திரம் மூலம் மேற்படி 51 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் 200 கிலோ கிராம் எடை கொண்ட கஞ்சா போதைப் பொருள் குழுவினரால் எரித்து அடிக்கப்பட்டது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0