கோவை மாவட்டம் பொள்ளாச்சி,பூசாரிபட்டிபக்கமுள்ள சுந்தர கவுண்டனூரை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் கவிபிரகாஷ் ( வயது 20)அதே ஊரை சேர்ந்தவர் பழனிச்சாமி. அவரது மகன் ஜெயபிரகாஷ் (வயது 24) இருவரும் பொள்ளாச்சியில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் ஊழியர்களாகவேலை பார்த்து வந்தனர். நேற்று உடுமலை – பொள்ளாச்சி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை ஜெய்பிரகாஷ் ஓட்டினார். கவி பிரகாஷ் பின்னால் இருந்தார். அங்குள்ள மின் நகர்,பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாகவந்த லாரி இவர்களது பைக் மீது மோதியது. இதில்இருவரும்படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தனர். இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம்சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்த லாரி டிரைவர் அங்கமுத்து (வயது54) கைது செய்யப்பட்டார் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0