14 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது.

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் நேற்று சூலூர் முத்து கவுண்டன் புதூர் அருகே வாகன சோதனை நடத்தினார்கள் அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் (வயது 45 )கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் (வயது 45) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 14 கிலோ கஞ்சா ,இரு சக்கர வாகனம். 4 சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப் பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 1லட்சத்து 40 ஆயிரம் இருக்கும். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.,,.