கள்ள சந்தையில் மது விற்ற 2பெண்கள் கைது

கோவை போத்தனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராமர் நேற்று வெள்ளலூர் கோனியம்மன் கோவில் வீதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு 2 பெண்கள் மது பாட்டில்களை மறைத்து வைத்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர்கள் வெள்ளலூர், கோனியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் மகள் காவியா ( வயது 21),கருப்பசாமி மனைவி கல்பனா (வயது 37) என்பது தெரியவந்தது.அவர்களிடடமிருந்து 27 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.