தடை செய்யப்பட்ட குட்கா விற்ற 2 வியாபாரிகள் கைது -1 லட்சம் பறிமுதல்..!

கோவை பீளமேடு காந்தி மாநகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 69 )இவர் அங்குள்ள செங்காளியப்பன் வீதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் பீளமேடு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக முருகேசன் கைது செய்யப்பட்டார். குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் இமாம் தீன் ( வயது 50) இவர் உக்கடம் லாரி பேட்டை அருகே டிரைவர்களுக்கு குட்கா விற்று கொண்டிருந்தாராம். இவரை உக்கடம் போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து குட்கா, மொபட், குட்கா விற்ற பணம் ரூ. 1லட்சத்து 10 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.