குட்கா விற்ற 2வியாபாரி கைது.

கோவை காட்டூர் சப் இன்ஸ்பெக்டர் அய்யாசாமி நேற்று காட்டூர், ரங்கன் வீதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட குட்கா 852.4 கிராம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக பெட்டிக்கடை நடத்தி வந்த கேரள மாநிலம் கண்ணனூரை சேர்ந்த முகம்மது அஷ்ரப் ( வயது 51) கைது செய்யப்பட்டார். இதே போல சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி ,சப் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் கணபதி மோர் மார்க்கெட் எல்.ஜி.பி. நகர், மேம்பாலம் பகுதியில் ரோந்துசுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள ஒரு மளிகை கடையில் குட்கா விற்றதாக கணபதி குமரன் நகரை சேர்ந்த சீனிவாசன் (வயது 40) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 105 . 971 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.இவர்கள் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.