கோவை கணபதியில் உள்ள பதிகவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் சபிருல்லா. இவரது மகன் முகமது ஷாலி ( வயது 10)மாணவன். இவர்களது உறவினரான நசீர் என்பவர் மகன் அஜ்மல் (வயது 21) தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் கேரள மாநிலம் பத்தினம் திட்டா பகுதியில் உள்ள உறவினர் வீடுகளு க்கு சுற்றுலா சென்றனர் .பின்னர் குளிப்பதற்காக அங்குள்ள கல்லாடா ஆற்றுப்பகுதிக்கு சென்றனர் .அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று நீரில் மூழ்கி பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டனர்..இவர்களது உடல் நேற்று கோவை க்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy1
Angry0
Dead0
Wink0