கோவையில் ஒரே நாளில் பைக் விபத்தில் 2 வாலிபர் பலி

கோவை: கன்னியாகுமரி மாவட்டம், காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் மகன் ஜெயின் (வயது 25 )இவர் நேற்று கோவை ரயில் நிலையம் ரோட்டில் பைக் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவரதுபைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது.சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் சம்பவ இடத்திற்கு சென்றுவிசாரணை நடத்தினார் .இது தொடர்பாக கார் ஓட்டி வந்த தர்மபுரி மாவட்டம்,நல்லாம் பள்ளியைச் சேர்ந்த ரத்தினகுமார் ( வயது 36) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல துடியலூர், சேரன் காலனி சேர்ந்தவர் சிவன் குமார். இவரது மகன் பரத் குமார் ( வயது 24) ஐ. டி .ஊழியர். இவர்நேற்று துடியலூர் – சரவணம்பட்டி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.சாய்பாபா காலனியை சேர்ந்த அவரது நண்பர்வெங்கடேஷ் ( வயது 23) பின்னால் இருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாகவந்த பள்ளிக்கூட வேன்இவர்கள் சென்ற பைக் மீது மோதியது ..இதில் பரத்குமார் அதே இடத்தில் இறந்தார்.பின்னால் இருந்த வெங்கடேஷ் படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தங்கமணி ,சப் இன்ஸ்பெக்டர் ,பேச்சு முத்து ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.இது தொடர்பாகதிண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்,புது சத்திரத்தைச் சேர்ந்த சேர்ந்த வேன் டிரைவர் விக்னேஷ் (வயது 23) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.