கோவை குனியமுத்தூர், மணிகண்டன் நகரை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் அர்ச்சனா (வயது 20) இவர் நேற்று தனது தோழிகளுடன் ஆலந்துறைக்குச் சென்றார் பின்னர் அங்கிருந்து இருந்து உக்கடம் வரும் தனியார் டவுன் பஸ்சில் பயணம் செய்தார். பிறகு மற்றொரு டவுன் பஸ்சில் குனியமுத்தூர் சென்று கொண்டிருந்தார்..பஸ்சை விட்டு இறங்கி பார்த்தபோது அவர் அணிந்திருந்த 2பவுன் செயினை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர். இது குறித்து அர்ச்சனா குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0