மளிகை கடையில் பூட்டை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது .

கோவை மதுக்கரை பக்கம் உள்ள அரிசி பாளையம், விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பட்டு ராஜா ( வயது 51 )இவர் அங்குள்ள மாரியம்மன் கோவில் வீதியில்மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 20 ஆம் தேதி இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் வந்து பார்த்தபோது கடையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .உள்ளே சென்று பார்த்த போது மேஜை டிராயரில் இருந்த 1800 ரூபாயை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து பட்டு ராஜா மதுக்கரை போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் இளவேந்தன் வழக்கு பதிவு செய்து அரிசிபாளையம், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் ( வயது 21 )பாஸ்கர் ( வயது 23) ஆகியோரை கைது செய்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.