கேரள லாட்டரி டிக்கெட் விற்ற 2 பேர் சிறையில் அடைப்பு.

கோவை வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் ,சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் நேந்து தொண்டாமுத்தூர் சிறுவாணி ரோட்டில் ரோந்துசுற்றி வந்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்து கொண்டிருந்ததாக கலிக்க நாயக்கன்பாளையம், வெங்கடேசன் நகரை சேர்ந்த சண்முகசுந்தரம் ( வயது 43) அருண்குமார் (வயது 32 )ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கேரளா லாட்டரி டிக்கெட்டுகள்பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களில் சண்முகசுந்தரம் எலக்ட்ரிக்கல் வேலையும், அருண்குமார் எம் காம் படித்து முடித்து விட்டு இன்சூரன்ஸ் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்தார். பகுதி நேரங்களில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்தது தெரிய வந்தது.